மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்விற்கான தேர்வுக்கால அட்டவணையினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ்-2 துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் நாளை வெளியிடப்படுகிறது.இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-நடைபெறவுள்ள ஜூன்/ஜூலை 2025, பிளஸ்-2 துணைத் தேர்வெழுத விண்ணப்பித்தத் தனித்தேர்வர்கள் தங்களது தேர்வுக்கூட ஹால்டிக்கெட்டுகளை நாளைஅன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் எப்படி பதவிறக்கம் செய்வது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.அதில் கூறியிருப்பதாவது:தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று முதலில் ஹால்டிக்கெட் என்ற வாசகத்தினை கிளிக் செய்தால் தோன்றும் பக்கத்தில் உள்ள "HSE SECOND YEAR SUPPLEMENTARY EXAM, JUNE JULY 2025 HALL TICKET DOWNLOAD என்ற வாசகத்தினை கிளிக் செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் அல்லது நிரந்தரப் பதிவெண்மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து, அவர்களுடைய தேர்வுக்கூட ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
மேலும் உரிய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். ஜூன்/ஜூலை 2025, மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்விற்கான தேர்வுக்கால அட்டவணையினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம். செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தைத் தனித்தேர்வர்கள் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். அரசுத் தேர்வுகள் இயக்ககம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.