நியூயார்க்கின் சிறந்த சமையல் கலைஞருக்கான 'ஜேம்ஸ் பியர்ட்' விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஃப் விஜயகுமார்..!
Seithipunal Tamil June 19, 2025 06:48 AM

சிகாகோவில் நடைபெற்ற விருது விழாவில், நியூயார்க்கின் சிறந்த சமையல் கலைஞருக்கான ' ஜேம்ஸ் பியர்ட்' விருதை தமிழ்நாட்டை சேர்ந்த செஃப் விஜயகுமார் பெற்றுள்ளார். இந்த விழாவில் விருது வாங்கியமை தொடர்பில் அவர் பேசியதாவது; 

சமைக்க தொடங்கிய போது தமிழ்நாட்டை சேர்ந்த கருப்பு தோலுடன் இருக்கும் தான் இப்படி ஒரு இடத்தில் இருப்பதை நினைத்து கூட பார்க்கவில்லை.  அக்கறையுடன், ஆன்மாவுடன் சமைத்த உணவுதான் தன்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளது என்றும் பெருமிதமாக கூறியுள்ளார்.

உணவகத்தில் ஏழையின் உணவு அல்லது பணக்காரரின் உணவு என்ற பேதம் இல்லை என்று னவர் தெரிவைத்துள்ளார்.  அமெரிக்காவின் மிக உயர்ந்த உணவு விருதுகளில் இந்த 'ஜேம்ஸ் பியர்ட்' விருது முக்கியமான ஒன்றாகும். 

குறித்த விருதின் மூலம் உணவகங்கள், சமையல்காரர்கள், புத்தகங்கள் மற்றும் ஊடகங்கள் போன்றவைகளின் திறமை மற்றும் சாதனைகளை அங்கீகரிக்கப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள தென் இந்திய உணவகமான செம்மா உணவகத்தில் திண்டுக்கலை சேர்ந்த விஜயகுமார் தலைமை செஃப்பாக பணியாற்றுகிறார். 

தென் இந்திய உணவை உலக நாடுகளுக்கு அறிமுகப்படுத்துவதில் செஃப் விஜயகுமார் முக்கிய பங்கு வகித்து வருகிகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.