பேரம் பேசி பொருள் வாங்குவது இந்தியாவில் மட்டும் தான். அந்த வகையில் இந்தியாவில் சுற்றுலா பயணம் மேற்கொண்ட ஒரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணி பேரம் பேசிய வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 74 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், பயணி ஒரு நல்லி பையை வாங்க முயற்சி செய்கிறார். விற்பனையாளர் முதலில் பைக்கு ரூ 550 விலை கூறுகிறார். ஆனால், வெளிநாட்டவர் அதை எதிர்த்து வாதிட, விலை 500, 400, 200, 150, 100 என தொடர்ந்து குறைக்கப்படுகிறது. இறுதியில், விற்பனையாளர் 50 ரூபாயாகக் குறைத்து அந்தப் பையை வாங்குகிறார்.
View this post on InstagramA post shared by Native Ty (@nativety)
இந்த வீடியோவை @nativety என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. “இந்தியாவில் சிப்ஸ் 0.25 டாலருக்கு கிடைக்கும். ஆனால் இந்த பை 550 ரூபாயா?” என்ற கேள்வியுடன் வீடியோவை பதிவிட்டுள்ளனர். அதனுடன், ‘India is a scam’ என வெளிநாட்டு பயணியின் குறிப்பு விளக்கம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இந்த ரீல், ஒரே நாளில் 3.45 கோடி பார்வைகள் மற்றும் 11.54 லட்சம் லைக்குகள் பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்தியர்களிடையே இந்த வீடியோ கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. சிலர், “இந்திய விற்பனையாளர்கள் வெளிநாட்டு வாடிக்கையாளர்களிடம் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும்” என கூறினாலும், பலர், “அதே பையை அவர் தன் நாட்டில் வாங்கியிருந்தால், 20 டாலருக்கும் மேலாக கொடுத்திருப்பார்” என்று பதிலளித்துள்ளனர். மற்றொரு பயனர், “இந்த பேரம் பேசும் திறமைக்கு, இந்திய மம்மிகளும் ஆட்கள் இல்லை!” என நகைச்சுவையாகக் கூறியிருந்தார். மேலும், “ஒரு CA-க்கும் இப்படி பேரம் பேச முடியாது” என்ற கருத்தும் வைரலாகியுள்ளது.
இந்த சம்பவம், இந்தியாவில் சந்தை முறைகளின் தனித்துவத்தையும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதையும் விளக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. பேரம் பேசும் கலாசாரம், இந்தியர்களுக்கு சாதாரணமானதென்றாலும், வெளிநாட்டவர்களுக்கு ஆச்சர்யம் தரக்கூடியது என்பதும், இந்த வீடியோவின் மூலம் உறுதியாகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது