குட் நியூஸ்..! மூன்று நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்தது..!
Newstm Tamil June 25, 2025 04:48 PM

திங்கட்கிழமை சவரனுக்கு 40 ரூபாயும், நேற்று சவரனுக்கு 600 ரூபாயும் குறைந்து ஒரு சவரன் ரூ.73,240-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், மூன்றாவது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 85 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.9,070-க்கும் சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.72,560-க்கும் விற்பனையாகிறது. மூன்று நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 4 நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 119 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

24-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,240

23-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,840

22-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,880

21-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,880

20-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,680

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

24-06-2025- ஒரு கிராம் ரூ.120

23-06-2025- ஒரு கிராம் ரூ.120

22-06-2025- ஒரு கிராம் ரூ.120

21-06-2025- ஒரு கிராம் ரூ.120

20-06-2025- ஒரு கிராம் ரூ.120

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.