தமிழகத்தில் முண்ணனி நடிகைகளில் ஒருவர் நடிகை மீனா. இவருக்கு தமிழக பாஜக மூலம் முக்கிய பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகை மீனா, அரசியல் பயணத்தில் இணையவிருப்பதாகவும், பாஜகவில் மாநில அளவிலான பொறுப்பு வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. அவர் துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்து, அவருடனான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பு, அவரது அரசியல் நுழைவுக்கு முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறது.
தமிழக பாஜகவில் புதிதாக 4 பொதுச் செயலாளர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும், இதில் மீனாவுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து, மாநில அளவிலான 28 பதவிகளுக்கான பட்டியல் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இதில் மீனாவுக்கு பொறுப்பு உறுதியாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே, நடிகை குஷ்பு உட்பட மீனாவின் சக நடிகைகள் பாஜகவில் முக்கிய பதவிகளில் இருந்து வருவது மீனாவின் அரசியல் நுழைவுக்கு உறுதுணையாக இருக்கலாம் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2024ம் ஆண்டு மத்திய அமைச்சர் எல்.முருகனின் இல்லத்தில் நடந்த பொங்கல் விழாவில் பிரதமர் மோடியுடன் மீனா கலந்து கொண்டது, நடன இயக்குநர் கலா மாஸ்டருடனான நெருங்கிய நட்பும், பாஜகவில் இணைய அவரை ஊக்கப்படுத்தியிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. தமிழக பாஜக தரப்பில் இருந்து இது குறித்த உறுதியான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது