சன் டிவிக்கு செம போட்டி கொடுக்கும் விஜய் டிவி சீரியல்கள்… டாப் 5ல் நடந்த முக்கிய மாற்றம்!
CineReporters Tamil June 27, 2025 06:48 PM

Serial TRP: தமிழ் சின்னத்திரை சீரியல்கள் ஒவ்வொரு வாரமும் தொடர்ச்சியாக போட்டி போட்டு கொண்டு இருப்பதால் ஒவ்வொரு வாரமும் டிஆர்பியில் பெரிய மாற்றம் நடந்து இருக்கிறது.

அந்த வகையில் இந்த வாரத்தின் சின்னத்திரை சீரியல்களின் டிஆர்பி வெளியிடப்பட்டுள்ளது. அதில் எப்போதும் போல முதலிடத்தினை சன் டிவியின் மூன்று முடிச்சு மற்றும் மருமகள் மகா சங்கமமே பிடித்து இருக்கிறது.

இரண்டாம் இடத்தினை சன் டிவியின் முக்கிய சீரியலான சிங்கப்பெண்ணே பெற்று இருக்கிறது. ஆனந்தியின் கர்ப்ப விஷயம் தொடர்ந்து மர்மமாக இருப்பதால் சீரியலின் பரபரப்பு கூடுனாலும் இதே கதை நகர்ந்தால் பெரிய அளவு அழுப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

மூன்றாவது இடத்தின் சன் டிவியின் கயல் சீரியல் இருக்கிறது. இந்த சீரியல் ரொம்ப வருடங்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும் தொடர்ந்து கதைக்களம் பெரிய பரபரப்பாக இல்லாததால் டிஆர்பியில் மூன்றாம் இடமே கிடைத்துள்ளது.

நான்காம் இடத்தில் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை தொடர் இடம் பிடித்துள்ளது. ரோகிணிக்கு பிரச்னை இருப்பதால் தொடர்ந்து வரவேற்பை பெற்று வந்தாலும் இன்னும் கதைக்களத்தில் சுவாரஸ்யம் கூட்டினால் மீண்டும் முதலிடத்தினை பிடிக்கும் இந்த சீரியல்.

ஐந்தாம் இடத்தின் விஜய் டிவியின் புதிய சீரியலான அய்யனார் துணை இருக்கிறது. கொஞ்ச நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த சீரியல் ரசிகர்களிடன் அதிக ஆதரவை தற்போது பெற்று வருவதால் இன்னும் டிஆர்பியில் மாற்றம் இருக்கலாம்.

ஆறாவது இடத்தில் எதிர்நீச்சல் தொடர்கிறது மற்றும் ஏழாவது இடத்தில் அன்னம் சீரியல் இருக்கிறது. இந்த சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இல்லை என்றாலும் சன் டிவியின் பிரைம் டைம் என்பதால் டாப் லிஸ்ட்டில் உள்ளது.

எட்டாவது இடத்தில் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடர் இருக்கிறது. தொடர்ந்து விறுவிறுப்பான காட்சிகளால் இந்த சீரியல் டாப் லிஸ்ட்டுக்குள் உள்ளது. ஒன்பதாவது இடத்தில் விஜய் டிவியின் சின்ன மருமகள் சீரியல் வந்து இருக்கிறது.

பத்தாவது இடத்தில் சன் டிவியின் ராமாயணம் சீரியல் வந்து இருக்கிறது. இந்த வாரம் டிஆர்பிக்குள் பெரிய மாற்றம் இருக்கிறது. அடுத்த வாரம் இதில் இன்னும் மாற்றம் ஏற்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.