நாகர்கோவில் அருகே சோகம்: சாலை சென்டர் மீடியனில் பைக் மோதி இருவர் உயிரிழப்பு..!
Seithipunal Tamil June 28, 2025 11:48 AM

நாகர்கோவில் அருகே சாலை விபத்தில் இருவர் பலியான சம்வபம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் பறக்கை ரோடு பகுதி சேர்ந்த பரெயான் முகமது (20). நண்பர் முகமது ஷபான் சிராஜ் (20). இவர் வடக்கு சூரங்குடியை சேர்ந்த இருவருமே குறித்த விபத்தில் பலியாகியுள்ளனர்.

இவர்கள் இருவரும் நேற்றிரவு சுமார் 02 மணியளவில் காவல் கிணறு சென்று விட்டு பைக்கில், நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டு இருந்துள்ளனர். அவர்கள் நாகர்கோவில் – அப்டா மார்க்கெட் இடையிலான நான்கு வழிச்சாலையில், திருப்பதிசாரம் டோல்கேட் கடந்து பைக் வந்து கொண்டுருந்த போது, திருப்பதிசாரம் திருப்பம் அருகே வரும் திடீரென பைக் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்று சென்டர் மீடியனில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இதில் பைக்கில் சென்ற ரெயான் முகமது மற்றும் முகமது ஷபான் சிராஜ் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். இதனால் தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவர்களை பார்த்தவர்கள் உடனடியாக  108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பின்னர் 02 பேரையும் மீட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில்,  வழியிலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும், ஆரல்வாய்மொழி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.