“நாட்டையே உலுக்கிய 9 பேரின் கொடூர கொலை”… டுவிட்டர் கொலையாளிக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு…!!!!
SeithiSolai Tamil June 28, 2025 06:48 PM

ஜப்பானின் டோக்கியோவுக்கு அருகிலுள்ள கனகாவா மாநிலம் ஜமா நகரைச் சேர்ந்த தகாஹிரோ ஷிரைஷி (பல்வேறு ஊடகங்களில் “ட்விட்டர் கொலையாளி” என அழைக்கப்பட்டவர்) மீது, 2017ஆம் ஆண்டு 8 பெண்கள் மற்றும் ஒரு ஆணைக் கழுத்தை நெரித்து கொலை செய்து, உடல் உறுப்புகளை துண்டித்து எரித்து தொங்கவைத்த கொடூரச் சம்பவம் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை, அந்த தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

அந்த 9 பேரும் சமூக ஊடக தளமான ட்விட்டர் வாயிலாக ஷிரைஷியுடன் தொடர்பு கொண்டவர்கள் என விசாரணையில் தெரியவந்தது. அவர்களில் பலர் தற்கொலை எண்ணம் கொண்டவர்களாக இருந்ததாகவும், அந்த ஆவணங்களை பயன்படுத்தி அவர்களை தனது அடுக்குமாடிக்கு அழைத்து சென்று கொலை செய்துள்ளதாகவும் வழக்கில் தெரியவந்தது. இந்த கொடூர சம்பவம் ஜப்பானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஜப்பான் நீதி அமைச்சர் கெய்சுகே சுசுகி, “சமூகத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்திய இந்த வழக்கில் குற்றவாளியின் செயல்கள் முற்றிலும் சுயநலபூர்வமாக இருந்தன. மிகுந்த கவனத்துடன் பரிசீலித்து, சட்டப்படி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது,” என்று தெரிவித்துள்ளார். இது, கடந்த அக்டோபரில் பிரதமர் ஷிகெரு இஷிபா தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஒரு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது என குறிப்பிடப்படுகிறது.

தற்போது ஜப்பானில் 105 மரண தண்டனை கைதிகள் உள்ளனர். ஆனால், இந்நாட்டில் மரண தண்டனை நடைமுறையில் உள்ளது என்பது சர்வதேச மனித உரிமை அமைப்புகளிடையே தொடர்ந்து எதிர்ப்பை ஏற்படுத்தி வருகிறது. தூக்கு தண்டனை வரும் சில மணி நேரங்களுக்கு முன்னதாகவே கைதிக்கு அறிவிக்கப்படும் நடைமுறையை மனித உரிமை அமைப்புகள் கடுமையாக விமர்சிக்கின்றன. ஆனால், “இன்னும் வன்முறைக் குற்றங்கள் நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், மரண தண்டனையை முழுமையாக ரத்து செய்வது யுகமானது அல்ல” என சுசுகி உறுதியாக தெரிவித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.