வைரலாகும் புகைப்படம்... நடிகர் விஜய், சிங்கப்பூர் உயர் ஆணையர் திடீர் சந்திப்பு!
Dinamaalai June 28, 2025 07:48 PM


பிரபல நடிகரும் தவெக தலைவருமான விஜய் தனது அரசியல் பயணத்தை தமது எளிமையான வாழ்கைமுறை, மக்களுக்கு நெருக்கமாக இருப்பது மூலம் மக்களிடையே பெரும்  ஆதரவைக் பெற்றுள்ளார். TVK மூலமாக நேர்மையான மாற்றத்தை கொண்டு வர விரும்புவதாக கூறியுள்ளார்.  சமூக நீதி, கல்வி முன்னேற்றம், இளைஞர்கள் மேம்பாடு ஆகியவற்றை மையமாகக் கொண்டு, அவர் அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளார். 


சிங்கப்பூர் உயர் ஆணையர் சைமன் வொங்க் மற்றும் நடிகர் விஜய் சமீபத்தில் சந்திப்பு நிகழ்ந்தது. இந்த சந்திப்பின்  போது எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.  இந்த சந்திப்பின் மூலம்  சர்வதேச பார்வையில் தனது அரசியல் பயணத்தை விரிவுபடுத்துகிறார் என பலரும் கருதுகின்றனர்.  


 இருவரும் அன்போடு கைகுலுக்கி பேசிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த சந்திப்பு விஜயின் அரசியல் தளத்திற்கு முக்கியமான இடமாகவே பார்க்கப்படுகிறது. சிங்கப்பூர் உயர் ஆணையருடன் பேச்சுவார்த்தை நடத்துவது வெளிநாட்டு உறவுகளுக்கான தொடக்கமாக கருதப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.