பாஜக தேசிய பொதுச்செயலாளராக அண்ணாமலை நியமனம்... குவியும் வாழ்த்துக்கள்!
Dinamaalai June 28, 2025 08:48 PM


 
தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர்  அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டதாக  கர்நாடக பாஜக எம்.பி. யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.  இதனைத் தொடர்ந்து முன்னாள் பாஜக எம்.பி. தருண் விஜய் உட்பட  பலரும் அண்ணாமலைக்கு வாழ்த்துக்களை  தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.


பாஜக தேசிய தலைமை இதுவரை அண்ணாமலையின் தேசிய பொதுச்செயலாளர் நியமனம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. எம்.பி. யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் போட்டுள்ள பதிவால் இந்த செய்தி வைரலாகி கொண்டு இருக்கிறது.  ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜூன் 27, 2025 அன்று அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் எனக் கூறியிருந்தார்.   
இதனைத் தொடர்ந்து, அண்ணாமலைக்கு தேசிய பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படலாம் என ஊகங்கள் எழுந்தன. தமிழக பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை, ஏப்ரல் 2025ல் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.  இதனால், அண்ணாமலைக்கு தேசிய அளவில் பதவி வழங்கப்படுவதாகவே பலரும் எதிர்பார்த்தனர்.


அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக எக்ஸ் தளத்தில் யதுவீர் மற்றும் தருண் விஜயின் பதிவுகளைத் தொடர்ந்து, அண்ணாமலைக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. பாஜகவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாததால், இந்த நியமனம் உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில்  அண்ணாமலையின் புதிய பதவி குறித்த ஊகங்கள் தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.