ஒருவரது தொலைபேசி உரையாடல்களை ஒட்டு கேட்பது அந்தரங்க உரிமைக்கு எதிரானது… மத்திய அரசின் அனுமதியை ரத்து செய்த உயர்நீதிமன்றம்..!!
SeithiSolai Tamil July 03, 2025 03:48 AM

சென்னை உயர்நீதி மன்றத்தில் கிஷோர் என்பவர் மத்திய அரசு அளித்துள்ள அனுமதியை ரத்து செய்ய வழக்கு தொடர்ந்து உள்ளார். அந்த வழக்கில், கிஷோரின் தனிப்பட்ட தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்க உள்துறை அமைச்சகம் சிபிஐ க்கு அதிகாரம் அளித்துள்ளது.

இது குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், “ஒரு குற்றத்தை கண்டுபிடிப்பதற்காக தனிப்பட்ட நபரின் தொலைபேசி உரையாடல்கள், தரவுகளை ஒட்டு கேட்பது அந்தரங்க உரிமைக்கு விரோதமானது.

இத்தகைய செயல்களை நீதிமன்றம் அனுமதிக்காது”என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் பொது அவசரம் கருதியோ அல்லது பாதுகாப்பு குறித்து சம்பந்தப்பட்ட விவகாரமோ என்றால் மட்டுமே தனி நபரின் உரையாடல்களை ஆராய்வதற்கு அனுமதி வழங்கப்படும்.

இந்த வழக்கு அத்தகைய ஏதேனும் முக்கிய விவகாரங்களில் சம்பந்தப்படவில்லை என்பதால் அனுமதி ரத்து செய்யப்படுகிறது என நீதிமன்றம் கூறியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.