பெற்றோர் காதலுக்கு ஒத்துக்கல... 5 வருஷ இணை பிரியா காதல் ஜோடி ஆட்டோவில் தூக்கிட்டு தற்கொலை!
Dinamaalai July 03, 2025 03:48 AM

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் வசித்து வருஅப்வர் 28 வயது ராகவேந்திரா யாதவ் . இவர் அதே பகுதியைச் சேர்ந்த 26 வயது ரச்சிதாவை காதலித்து வந்தார். 5 வருடக் காதலை அடுத்து இருவரும் வெவ்வேறு பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ரச்சிதாவுக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பாக அவருடைய பெற்றோர் வேறொரு இளைஞருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து வைத்தனர். இதனையடுத்து மீண்டும் அவரது காதலன் ரட்சிதா வீட்டிற்கு சென்று அவருடைய பெற்றோரிடம் பேசினார். ஆனால் தங்களுடைய பெண்ணை தருவதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்துவிட்டனர். அதே நேரத்தில் இளைஞரின் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனால் மன வேதனையில் இருந்த காதல் ஜோடி நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறியது. வனப்பகுதியில் நிறுத்தப்பட்ட ஆட்டோவில் இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து காவல்துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையின் படி காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஆட்டோவில் வைத்து இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.