இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மாதந்தோறும் ரூ.4,00,000/- மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு !
Dinamaalai July 03, 2025 03:48 AM

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி. இவர் தற்போது தான் காயத்தில் இருந்து மீண்டு இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஐபிஎல் சீசனிலும் விளையாடிய ஷமி அவரது முன்னாள் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து வெளியான உத்தரவின்படி 20214ல் ஷமி ஹசீம் ஜஹான் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2015 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இவர்கள் 4 ஆண்டுகள் திருமண உறவில் மகிழ்ச்சியாக வாழ்ந்த நிலையில் அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.

2018ல் ஜஹான் தன்னை ஷமி துன்புறுத்துவதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனையடுத்து இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்ட நிலையில் ஜஹான் ஜீவனாம்சம் கோரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதன்படி ஜஹான் மாதம் 10 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் கேட்ட நிலையில் 1.5 லட்சம் வழங்குவதற்கு அலிபூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து அவர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்துள்ளது. மாதம் ரூ 4 லட்சம் ஜஹானுக்கு ஜீவனாம்சம் வழங்குவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஜீவனாம்சமாக இனி மாதந்தோறும் ஷமி அவரது முன்னாள் மனைவிக்கு 4 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.