சிறுவர்களிடமும் முத்திப்போன ரீல்ஸ் மோகம்…! “நடு ரோட்டில் கார் ஓட்டி சென்ற பள்ளி குழந்தைகள்”… அதுவும் வீடியோ எடுத்த படியே… நெட்டிசன்களை அதிர்ச்சிகுள்ளாக்கிய வீடியோ..!!!
SeithiSolai Tamil July 03, 2025 03:48 AM

ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், பள்ளி யூனிஃபார்ம் அணிந்த இரண்டு சிறுவர்கள் பொதுவழியில் காரை ஓட்டும் காட்சிகள் பதிவாகியுள்ளன. ஒரே நேரத்தில் இருவரும் பாடலுக்கு இசைபட “வைப்” செய்ய, வீடியோ எடுத்து மகிழ்ந்துள்ளனர்.

அந்த வீடியோவில், ஓர் சிறுவன் டிரைவராக இருந்தார்; மற்றொருவர் பாசஞ்சர் இருக்கையில் கைபேசியைக் கையில் பிடித்து வீடியோ எடுக்கிறார். டிரைவராக இருந்த சிறுவன் அடிக்கடி ரோட்டிலிருந்து கண் திருப்பி கேமராவைப் பார்த்தபடியே காரை ஓட்டியுள்ளார். இது, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சாலையோர பயணிகளின் பாதுகாப்புக்கு மிகப்பெரும் அபாயத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பெற்றோர் கவனக்குறைவால் இப்படியான நிகழ்வுகள் தொடர்ந்து நடக்கின்றன என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. மேலும் இது தொடர்பாக நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

 

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.