சோகம்! கல்லூரி சுவரில் கார் மோதி மணமகன் உட்பட 8 பேர் பலி..!
Newstm Tamil July 05, 2025 08:48 PM

உத்தரபிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் கல்லூரி வளாக சுவரில், அதிவேகமாக வந்த கார் மோதி விபத்தில் சிக்கியது. காரில் திருமண விழாவிற்கு மணமகன் உட்பட ஒரே குடும்பத்தினர் 10 பேர் சென்று கொண்டிருந்த போது நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில், மணமகன் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த விபத்து காலை 6:30 மணியளவில் நிகழ்ந்தது.

கல்லூரி அருகே கார் சென்று கொண்டிருந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சுவரில் மோதி கவிழ்ந்தது. திருமண விழாவிற்கு சென்ற போது விபத்து நிகழ்ந்து மணமகன் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.