இந்தி வெறும் 200 ஆண்டுக்கால வரலாறு கொண்ட மொழி. இந்தி பேசாத மாநிலங்கள் மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளன. 3ம் மொழிக்கு இந்தியாவில் என்ன தேவை உள்ளது? என எம்.என்.எஸ் தலைவர் ராஜ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.
மும்பையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்ட வெற்றி கூட்டத்தில் பேசிய மகாராஷ்டிர நவநிர்மான் சேனா கட்சியின் நிறுவனத் தலைவர ராஜ் தாக்கரே, “இந்தி வெறும் 200 ஆண்டுக்கால வரலாறு கொண்ட மொழி. இந்தி பேசாத மாநிலங்கள் மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளன. 3ம் மொழிக்கு இந்தியாவில் என்ன தேவை உள்ளது? மகாராஷ்டிராவில் மராட்டியத்தில் மராட்டியத்திற்கு மட்டுமே முக்கியத்துவம். ஆனால் பாஜக இந்தியை திணிக்கிறது. இந்தியா முழுவதும் மராட்டிய பேரரசர்கள் ஆட்சி செய்தபோது மராத்தியை திணிக்கவில்லை. மராட்டியத்தில் இருந்து மும்பையைப் பிரிக்க சதி நடக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம். வேண்டுமென்றே மராத்தி பேசாவிட்டால் காதுகளுக்குக் கீழ் அடியுங்கள். நீங்கள் ஒருவரை அடித்தால் அந்த சம்பவத்தை வீடியோ எடுக்காதீர்கள். நீங்கள் அடித்ததை வெளியில் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். குஜராத்தி (அ) வேறு யாராக இருந்தாலும் மகாராஷ்டிராவில் மராத்தி பேச வேண்டும்” என்றார்.