தெலங்கானா மாநிலத்தில் சங்காரெட்டி மாவட்டத்தில் ரசாயன ஆலை வெடி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிகாச்சி மருந்து ஆலையில் ஜூன் 30 ம் தேதி நடைபெற்ற வெடி விபத்தில், 70 சதவிகித தீக்காயங்களுடன் படுகாயம் அடைந்த நிலையில் 48 வயதுடைய தொழிலாளி ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று ஜூலை 5ம் தேதி பலியானதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெடி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி விபத்தில் படுகாயம் அடைந்த 19 பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவத்தில், மருந்து ஆலையில் மாயமான 9 பேரை தேடி வருகின்றனர். பலியானோர் உடல்களை அடையாளம் கண்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?