ஒடிசா மாநிலத்தில் உள்ள டென்கனல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த ஜூன் 5ஆம் தேதி திருமணநிகழ்ச்சி ஒன்று வெகு விமர்சையாக கொண்டப்பட்டது. அந்த நிகழ்வில் மணமக்கள் ஊர்வலம் நடைபெற்றது.
அந்த ஊர் வலத்தில் மணமக்கள் வாகனத்தில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது வாகனத்தில் டிஜே இசை வைக்கப்பட்டிருந்தது.
அதற்காக வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கியில் மின்சார ஒயர் உரசி உள்ளது. அதில் திடீரென வாகனத்தின் மீது மின்சாரம் பாய்ந்த நிலையில் டிஜே இசையமைப்பாளர்கள், மணமக்கள் உட்பட 6 பேர் தூக்கி வீசப்பட்டனர்.
உடனே பதறிப் போன உறவினர்கள் ஆறு பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதில் முந்து என்ற இளைஞர் ஒருவர் மட்டும் பரிதாபமாக உயிரிழந்தார்.
மீதமுள்ள 5 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.