4 வருட திமுக ஆட்சியில் 25 லாக்கப் உயிரிழப்புகள்... வலுக்கும் கண்டனங்கள்!
Dinamaalai July 07, 2025 05:48 AM

இந்த 4 வருட திமுக ஆட்சியில், லாக்கப் மரணங்களில் ஸ்டாலினின் திமுக அரசு முதலிடத்தில் உள்ளது என்று கழக அம்மா பேரவை செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேசியிருக்கிறார். 

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் விசாரணை அழைத்துச் செல்லப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார், இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்ல, தேசிய அளவில் நீதி கேட்டு ட்ரெண்டிக்காக உருவாகி உள்ளது இன்றைக்கு ஸ்டாலின் திமுக ஆட்சியில் இருப்பது காவல் நிலையமா ?கொலை நிலையமா? என்று கேள்வி எழுந்துள்ளது.

அரசு இது குறித்து கவலைப்பட்டதாக தெரியவில்லை இதுகுறித்து ஸ்டாலின் பதில் சொல்ல முன்வரவில்லை என்ற கேள்வி எழுந்து வருகிறது? இன்றைக்கு ஸ்டாலின் ஆட்சியில் வரி உயர்வு போல லாக்கப் மரணங்களும் உயர்ந்து வருகிறது. 

தேசிய மனித உரிமை ஆணையம் ஒரு தகவல் வெளியிட்டது அதில் லாக் அப் மரணத்தில் தென் மாநிலங்களில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது என்று கூறியுள்ளது 

2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் சத்தியவான் என்பவரை அழைத்து செல்லப்பட்டு அவர் உயிர்த்தார்.

2021 செப்டம்பர் மாதம் பராமத்தி வேலூர் காவல் நிலையத்தில் மணிகண்டன் அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார் .

2021 டிசம்பர் மாதம் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் மணிகண்டன் என்ற கல்லூரி மாணவர் அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.

2022 பிப்ரவரி மாதம் நெல்லை காவல் நிலையத்தில் சுலைமான் என்பவர் அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.

2022 ஏப்ரல் சென்னை தலைமைச் செயலாளர் காலனி காவல் நிலையத்தில் விக்னேஷ் என்பவர் அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.

2022 ஏப்ரல் திருவண்ணாமலை  காவல் நிலையத்தில் தங்கமணி என்பவர் அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.

2022 ஜூன் பழைய கொடுங்கையூர் காவல் நிலையத்தில் அப்பு என்பர் அழைத்துச் செல்லப்பட்டு உயிர் இழந்தார் .

திமுக ஆட்சியில் லாக்கப் மரணம் எடுத்துக் கொண்டால் 2021 ஆண்டில்  2 மரணம், 2022 ஆண்டில் 4 மரணம், 2023 ஆண்டில் 7 மரணங்கள்  ஏற்பட்டுள்ளது ஆக மொத்தம் இதுவரை 25 லாககப் மரணங்கள் நடைபெற்றதாக செய்திகள் வெளி வருகிறது.

அதேபோல கடந்த 2025 மார்ச் மாதம் முத்துக்குமார் என்ற காவலர் படுகொலை செய்யப்பட்டதற்கு எடப்பாடியார் கேள்வி எழுப்பும் போது உரிய பதில் இல்லை.

இன்றைக்கு அரசு வேடிக்கை பார்க்கிறதா? ஸ்டாலினுக்கு நிர்வாகம் தெரியவில்லையா அல்லது தெரிந்தும் கையாள தெரியவில்லையா? இல்லை சாகட்டும் என்று சாக்கு போக்கு சொல்லி இருந்து விடுகிறாரா? ஸ்டாலினுக்கு காவல் துறையை வழிநடத்த தெரியவில்லையா?” என்று கூறினார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.