“சாக்லேட் வாங்கித் தாரேன் வா”… 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 65 வயது முதியவர்… 20 ஆண்டு சிறை தண்டனை…கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு..!!
SeithiSolai Tamil July 07, 2025 06:48 AM

ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த முதியவர் ராமகிருஷ்ணா (65). இவர் அப்பகுதியில் விவசாயத் தொழில் செய்து வந்திருந்தார். இவருக்கு குழந்தைகள், மனைவி உள்ளனர்.

இவர் மதுவிற்கு அடிமையாக இருந்ததால் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் உள்ளவர்களை துன்புறுத்தியதால் அவர்களது குடும்பத்தினர் அவரை விட்டுப் பிரிந்து சென்றுள்ளனர்.

அதனால் தனிமையில் சுற்றித் திரிந்த ராமகிருஷ்ணன் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அதே கிராமத்தில் உள்ள 9 வயது சிறுமியை மிட்டாய் வாங்கி கொடுப்பதாக கூறி அழைத்துச் சென்ற பாலில் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனை அடுத்து சோமலா காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்த வழக்கு சித்தூர் சிறப்புப் சொல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி எம். சங்கரராவ் தலைமையின் கீழ் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராமகிருஷ்ணன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 5000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.