தமிழ் திரையுலகமே பெரிதும் எதிர்பார்த்து பதைபதைப்பில் காத்திருக்கிறது. சமீப காலங்களாக தமிழகத்தில் போதைப்பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து இருக்கும் நிலையில், தமிழ் திரையுலகில் பல நடிகர்கள், நடிகைகள் போதைக்கு அடிமையானதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோரது ஜாமீன் மனுக்களின் மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.
முன்னதாக போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஶ்ரீகாந்த் கடந்த ஜூன் 23ம் தேதி கைது செய்யப்பட்டார். இதே வழக்கில் ஜூன் 26ம் தேதி நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டார்.
இருவரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள் சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து, இருவர் தரப்பிலும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள், நீதிபதி நிர்மல் குமார் முன் இன்று விசாரணைக்கு வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?