இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப், நேற்று இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒரு அற்புதமான சாதனையை நிகழ்த்தினார். 49 ஆண்டுகளில் இந்த சாதனையை எட்டிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். டெஸ்ட் போட்டியின் ஒரு இன்னிங்ஸில் இங்கிலாந்தின் முதல் ஐந்து பேட்ஸ்மேன்களில் நால்வரை ஆட்டமிழக்க செய்த முதல் பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் ஆவார். இதற்கு முன், 1976 இல் மேற்கிந்தியத் தீவுகள் ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருந்தார்.
ஆகாஷ் தீப், ஐந்தாம் நாள் முதல் செஷனில் பென் டக்கெட் மற்றும் ஜோ ரூட் விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு, ஹாரி புரூக் மற்றும் ஆலி போப் ஆகியோரை வெளியேற்றினார். இந்த போட்டியில் இந்தியா இங்கிலாந்தை 336 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்ய, ஆகாஷ் தீப் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆகாஷ் தீப் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, மொத்தம் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். எட்க்பாஸ்டனில் டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் முதல் வெற்றி இதுவாகும். இந்த அபார வெற்றியின் மூலம், சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்தது.
மூன்றாம் நாள் ஆட்டத்தை 3 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்களுடன் தொடங்கிய இங்கிலாந்து, மதிய உணவு இடைவேளைக்கு முன்பு 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்களாக குறைந்தது. இந்தியப் பந்துவீச்சாளர்கள் தொடர்ச்சியான அழுத்தத்தை கொடுத்தனர். இறுதியில், இரண்டாவது செஷனில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியாவின் 608 ரன்கள் என்ற பெரிய இலக்கிற்கு இங்கிலாந்து ஒருபோதும் உண்மையான அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை.
வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் (6/99) டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். மழை காரணமாக தாமதமான காலை செஷனில் அவர் இரண்டு முறை தாக்கி இங்கிலாந்துக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி அளித்தார். மதிய உணவுக்கு பிறகு களமிறங்கிய அவர், ஜேமி ஸ்மித்தை 88 ரன்களில் வெளியேற்றி வெற்றிக்கு அடித்தளமிட்டார். ஜேமி ஸ்மித் மட்டுமே இங்கிலாந்து பேட்டிங்கில் போராடிய ஒரே வீரர் ஆவார். பின்னர் அவருடைய விக்கெட்டையும் ஆகாஷ் தீப் வீழ்த்தியதால் போட்டி முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜூலை 10 ஆம் தேதி லண்டனில் தொடங்குகிறது.