மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை மமிதா பைஜூ. இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட இவர் பிரேமலு என்ற படத்தில் நடித்து தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கினார். தற்போது தமிழில் தமிழ் தளபதி விஜய் உடன் இணைந்து தளபதி 69 படத்தில் நடித்துள்ளார். மேலும் சூர்யாவின் 46வது படத்திலும், பிரதீப் ரங்கநாதன் உடன் டியூட் என பல படங்களிலும் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் மமிதா பைஜு பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது, நான் டாக்டர் ஆக வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் சினிமாவில் நடிக்க வந்து விட்டேன். சினிமாவுக்கு வந்த பிறகும் டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது.
ஆனால் 7 படங்களில் நடித்த பிறகு அந்த கனவை கைவிட்டுவிட்டேன். முதலில் அதற்காக அப்பா வருத்தப்பட்டார். ஆனாலும் ஆதரவு கொடுத்தார். காரணம் அவர் நடிகராக நினைத்தார். ஆனால் அவர் டாக்டர் ஆகிவிட்டார். என் அப்பா நன்றாக படிப்பார் என்று தெரிவித்துள்ளார்.