கோவையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்... மனைவிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததால் மருதமலையில் சாமி தரிசனம்!
Dinamaalai July 07, 2025 05:48 AM

கோவையில் உள்ள பிரபல கங்கா மருத்துவமனையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்கின் மனைவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்ததால் மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சுவாமி தரிசனம் செய்தார்.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கோவைக்கு வருகை தந்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது மனைவி கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதன் காரணமாகவே அவர் கோவைக்கு வந்திருப்பதாக கூறப்பட்டது.

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மனைவி சாவித்திரி சிங் (72) கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள பிரபலமான கங்கா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை அவரது இரு மகன்களும், மகளும் கவனித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று பிற்பகல் தனி விமானம் மூலம் கோவை வந்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், கார் மூலம் கோவை மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள கங்கா மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சுமார் 1.45 மணி நேரம் தனது மனைவியுடனிருந்து சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த அவர் பின்னர் மாலையில் மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக மருதமலை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. பின்னர் மாலை6.30 மணிக்கு மருதமலை கோவிலுக்கு சென்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் முருகப்பெருமானை மனம் உருகி வேண்டி தரிசனம் செய்தார். தொடர்ந்து மீண்டும் தனது மனைவி அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.