சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஜூலை 18ம் தேதி நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். நடைபெற இருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்து இந்த எம்.பிக்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 21ம் தேதி மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க இருக்கும் நிலையில் எம்.பிக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
இது குறித்து துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கழக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், 18.07.2025 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு , சென்னை, அண்ணா அறிவாலயம் ‘முரசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். அப்போது கழக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?