தந்தை, மகன் இடையே வலுக்கும் மோதல்… பாமக செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்…!!!
SeithiSolai Tamil July 08, 2025 08:48 PM

பாமகவில் தந்தை மகன் மோதல் முற்றிய நிலையில் இருவரும் தனித்தனியே செயல்படுகின்றனர். அன்புமணிக்கு ஆதரவு தெரிவிக்கும் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை நீக்கிவிட்டு, தன்னுடைய ஆதரவாளர்களை ராமதாஸ் நியமித்து வருகிறார். பாமகவில் நிர்வாகக்குழு, செயற்குழு, பொதுக்குழு என 3 அதிகார அமைப்புகள் உள்ளது. அன்புமணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாக குழுவை கலைத்துவிட்டு, 21 பேர் கொண்ட புதிய நிர்வாகக் குழுவை ராமதாஸ் அறிவித்திருந்தார்.

அதில் அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் இடம் பெறவில்லை. இந்நிலையில் இன்று திண்டிவனம் அருகே ஓமந்தூரில் பாமக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுவெளியில் ராமதாஸ் பேச்சுக்கு கட்டுப்படாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக செயல் தலைவர் அன்புமணிக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மொத்தம் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கூட்டணி முடிவு எடுக்க ராமதாஸ் மட்டும் அதிகாரம் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது; பொதுவெளியில் ராமதாஸின் பேச்சுக்கு கட்டுப்படாமல் இருப்பது கட்சிக்கும் நிறுவனருக்கும் கலங்கத்தை உருவாக்கும் வகையில் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. தனது செயலுக்கு அன்புமணி வருத்தம் தெரிவிக்க வேண்டும் போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.