கோலிவுட் சினிமாவில் கேமராமேனாக அறிமுகம் ஆகி பின்பு இயக்குநராக பிரபலம் ஆனவர் பிரேம் குமார் (Director Prem Kumar). இவர் தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்த 96 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். இவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படத்திலேயே தென்னிந்தியா முழுவதும் ரசிகர்களை பெற்றார். இவரது முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த நிலையில் இவர் இரண்டாவதாக நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்தசாமி நடிப்பில் வெளியான மெய்யழகன் படத்தை இயக்கினார். ஃபீல் குட் படமாக வெளியான இது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இயக்குநர் பிரேம் குமார் சமீபத்தில் ஒரு கலந்துறையாடலில் பேசிய போது தமிழ் சினிமாவில் நெகட்டிவ் விமர்சனங்கள் பெரும் பிரச்னையை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
அந்த கலந்துறையாடலில் இயக்குநர் பிரேம் குமார், “தமிழ் சினிமா சமீபத்தில் நெகட்டிவ் விமர்சனங்களால் பெரிய பிரச்சனையை சந்தித்து வருகிறது. இந்த புகார் எல்லார் மீதும் சொல்லவில்லை. ஆனால் பல விமர்சகர்கள் படத்தை குறை கூறி முதல் வார வசூலை குறைக்கும் ஒரு திட்டத்துடன் குறிவைத்து செயல்படுகிறார்கள். பாசிட்ட்வான விமர்சகர்கள் கூட ஒரு படத்தை விமர்சனம் செய்யும் திறன் கொண்டவர்கள் அல்ல” என்றும் இயக்குநர் பிரேம் குமார் பேசியிருந்தார். இது தற்போது இணையத்தில் அதிகமாக வைரலாகி வருகின்றது.
Also Read… 3 BHK படத்தைப் பாராட்டிய இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து – வைரலாகும் பதிவு
இணையத்தில் கவனம் பெரும் இயக்குநர் பிரேம் குமார் பேசிய வீடியோ:“Tamil Cinema is facing a big problem with Negative reviews. Not everyone, but many reviewers are doing with an agenda to pull the film down & target the first week collection. Even honest reviewers don’t have capacity to review a film”
– Premkumar pic.twitter.com/zvegObMPVL— AmuthaBharathi (@CinemaWithAB)
Also Read… வாரிசு நடிகராக இல்லை என்றால் சினிமாவில் அந்த வாய்ப்பே உங்களுக்கு கிடைக்காது – விஜய் தேவரகொண்டா ஓபன் டாக்
பிரேம் குமார் போல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் சொன்ன விசயம்:முன்னதாக பேட்டி ஒன்றில் பேசிய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குநர் பிரேம் குமார் பேசியது போல ஒரு விசயத்தை பேசியிருந்தார். அதில் குறிப்பிட்ட சிலர் முக்கிய நடிகர்களின் படங்கள் வெளியாகிறது என்றால் அதனை ஓடவிடாமல் என்ன எல்லாம் நெகட்டிவ் விமர்சனம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்கின்றனர் என்று வெளிப்படையாக பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.