Health Tips: தினமும் உங்களுக்கு விக்கலால் தொல்லையா..? ஏன் ஏற்படுகிறது? தடுக்க இதை செய்யலாம்!
Tv9 Tamil July 10, 2025 01:48 AM

பலருக்கு எப்போதும் எப்படி விக்கல் (Hiccups) வரும் என்று யாருக்கும் தெரியாது. பொதுவாக தமிழ்நாட்டில் (Tamil Nadu) ஒருவர் நினைப்பதால் விக்கல் வரும் என்று சொல்வார்கள். இப்படியாக வரும் விக்கல் சிலருக்கு இடைவிடாமல் வரும். சிலருக்கு வந்த வேகத்தில் நின்றுவிடும். விக்கல் அனைவருக்கும் வரும் பொதுவான ஒன்று என்றாலும், சில நேரங்களில் நமக்கு அதிக தொல்லையை தரும். இவை அடிக்கடி வரும்போது இவற்றை சமாளிப்பது பெரும் கஷ்டமாகிவிடும். அதன்படி, விக்கல் பிரச்சனையை நீங்கள் அடிக்கடி சந்தித்தால், அவற்றை எப்படி நிறுத்துவது? நமக்கு ஏன் விக்கல் வருகிறது? இந்த தொடர்ச்சியான விக்கல்களுக்கு என்ன காரணம்? என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

விக்கல் எங்கு ஏற்படுகிறது?

இதயத்தையும் நுரையீரலையும் வயிற்றுப் பகுதியிலிருந்து பிரிக்கும் தசை உதரவிதானம் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஒருவர் சுவாசிக்கும்போது இந்த தசை முக்கிய பங்கு வகிக்கிறது. மார்புக்கும் வயிற்றுக்கும் இடையிலான தசையில் திடீரென சுருங்கும்போது விக்கல் ஏற்படுகிறது. இந்த சுருங்குதல் நுரையீரலில் இருந்து காற்றை விரைவாக வெளியேற்றி , தொண்டைக்கு அருகிலுள்ள குரல் நாண்களை மூடுகிறது , இது இந்த ஒலியை உருவாக்குகிறது. இதையே விக்கல் என்று அழைக்கிறோம். பெரும்பாலானோர் வாய் வறண்டு போவது, உணவுப் பற்றாக்குறை மற்றும் பிற காரணங்களால் விக்கல் ஏற்படுகிறது என்று நினைக்கிறார்கள். இவை இயல்பானவை. அவை வந்து போகும்.

ALSO READ: மார்பு அழுத்தம், வியர்வை.. இந்த அறிகுறிகள் இருக்கா? மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு

விக்கல் எப்போது, ​​எப்படி ஏற்படுகிறது?
  • அதிகப்படியான மது அருந்துதல் மற்றும் புகைபிடித்தல் ஆகியவையும் விக்கல்களை ஏற்படுத்தும்.
  • ஒருவர் சோம்பலாக இருக்கும்போதும் விக்கல் ஏற்படலாம்.
  • கடுமையான மன அழுத்தத்தில் இருக்கும்போது விக்கல் ஏற்படும்.
  • சில நேரங்களில், நீங்கள் அதிகமாக உற்சாகமாக இருக்கும்போது விக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
  • காற்றின் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களாலும் விக்கல் ஏற்படலாம்.
  • மெல்லாமல் சாப்பிடுவதும் விக்கலை ஏற்படுத்தும்.
  • அதிகமாக மசாலா மற்றும் காரமான உணவுகளை சாப்பிடுவதும் விக்கலை ஏற்படுத்தும்.
  • செரிமானக் கோளாறுகள் காரணமாகவும் விக்கல் ஏற்படலாம்.
  • ALSO READ: உங்களுக்கும் கால்களை ஆட்டும் பழக்கம் இருக்கா..? அப்படியானால் இதை மனதில் கொள்ளுங்கள்..!

    விக்கல்களை நிறுத்துவது எப்படி..?
    • விக்கலை நிறுத்த, வெதுவெதுப்பான நீரை எடுத்து, அதில் சிறிது புதினா இலைகள், எலுமிச்சை சாறு மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும். இந்த தண்ணீரை குடிப்பதால் விக்கல் குறையும்.
    • 2 ஏலக்காயை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த தண்ணீரை குடிக்கவும்.
    • ஒரு சிட்டிகை பெருங்காயப் பொடியை எடுத்து, அரை டீஸ்பூன் வெண்ணெயுடன் கலக்கவும். இதைச் சாப்பிட்டால் விக்கல் குறையும்.
    • அடிக்கடி விக்கல் வந்தால், எலுமிச்சையின் வாசனையை உள்ளிழுக்கவும். இது உடனடியாக விக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
    • வெந்தயப் பொடி மற்றும் கருஞ்சீரகப் பொடியைக் கலந்து, ஒரு ஸ்பூன் பொடியை தண்ணீரில் கலந்து குடித்தால் விக்கலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்
    • தேன் சாப்பிடுவதும் விக்கலையும் குறைக்கும்.
    © Copyright @2025 LIDEA. All Rights Reserved.