'ஏழை குடும்பத்தில் பிறந்த எனக்கு கிடைத்த வாய்ப்பு' நமீபியா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உருக்கம்!
Tv9 Tamil July 10, 2025 02:48 AM

டெல்லி, ஜூலை 04 : அரசு முறை பயணமாக நமீபயா நாட்டிற்கு பிரதமர் மோடி சென்றிருக்கிறார். அங்கு சென்ற பிரதமர் மோடி (PM Modi) உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி ஜனாதிபதி நந்தி-நதைத்வாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு நமீபியா நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார் (PM Modi Speech In Namibia Parliament). முதல்முறையாக நமீபியா நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றி உள்ளார். அப்போது, அவர் பேசுகையில், “ஜனநாயகத்தின் கோவிலான இந்த உன்னதமான சபையில் உரையாற்றுவது மிகப்  பெரிய பாக்கியம். எனக்கு இந்த கௌரவத்தை வழங்கியதற்கு நன்றி. ஜனநாயக தாயின் பிரதிநிதியாக நான் உங்கள் முன் நிற்கிறேன், மேலும் இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களின் அன்பான வாழ்த்துக்களை என்னுடன் கொண்டு வருகிறேன்.

சில மாதங்களுக்கு முன்பு, நீங்கள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தைக் கொண்டாடினீர்கள். நமீபியா அதன் முதல் பெண் குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுத்தது. இந்தியாவில், நாங்கள் பெருமையுடன் மேடம் குடியரசுத் தலைவர் என்று சொல்கிறோம். இதனால், உங்கள் (நமீபியா) பெருமையையும் மகிழ்ச்சியையும் நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஒரு ஏழை பழங்குடி குடும்பத்தின் மகள் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் குடியரசுத் தலைவராக இருப்பது இந்திய அரசியலமைப்பின் சக்தி. ஏழைக் குடும்பத்தில் பிறந்த என்னைப் போன்ற ஒருவருக்கு மூன்று முறை பிரதமராகும் வாய்ப்பை வழங்கியது அரசியலமைப்பின் சக்தி. எதுவும் இல்லாதவர்களுக்கு அரசியலமைப்பின் உத்தரவாதம் உள்ளது” என கூறினார்.

Also Read : டிரினிடாட் அண்டு டுபாகோவில் பிரதமர் மோடி.. உற்சாக வரவேற்பு!

நமீபியா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு

#WATCH | Windhoek: Addressing the Parliament of Namibia, PM Narendra Modi says, “A few months ago, you celebrated a historic moment, Namibia elected its first woman president. We understand and share your pride and joy because in India, we also proudly say Madam President. It is… pic.twitter.com/7dr3mldANa

— ANI (@ANI)


தொடர்ந்து பேசிய அவர், ”உங்கள் விடுதலைப் போராட்டத்தின் போது இந்திய மக்கள் நமீபியாவுடன் பெருமையுடன் நின்றனர். சுதந்திரத்திற்கு முன்பே, இந்தியா தென்மேற்கு ஆப்பிரிக்காவின் பிரச்சினையை ஐக்கிய நாடுகள் சபையில் எழுப்பியது. வெறும் வார்த்தைகளில் மட்டுமல்ல, செயலிலும் உங்களுடன் நின்றதில் இந்தியா பெருமை கொள்கிறது.

Also Read : 57 ஆண்டுகளுக்கு பின் அர்ஜென்டினா செல்லும் இந்தியப் பிரதமர்.. பல்துறைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டம்..

நாங்கள் போட்டியிட விரும்பவில்லை, ஒத்துழைக்கவே விரும்புகிறோம். ஒன்றாகக் கட்டியெழுப்புவதே எங்கள் குறிக்கோள். எடுத்துக்கொள்வது அல்ல. நாம் ஒன்றாக வளர்வது தான். ஆப்பிரிக்கா வெறும் மூலப்பொருட்களின் மூலமாக மட்டும் இருக்கக்கூடாது என்று நாங்கள் நம்புகிறோம். மதிப்பு மற்றும் நிலையான வளர்ச்சியில் ஆப்பிரிக்கா முன்னணியில் இருக்க வேண்டும். அதனால்தான் தொழில்மயமாக்கலுக்கான ஆப்பிரிக்காவின் நிகழ்ச்சி நிரல் 2063 ஐ நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்.” என்றார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.