நிமிஷாவின் தூக்குதண்டனை... நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்பு!
Dinamaalai July 10, 2025 09:48 PM

ஏமனில் நடந்த கொலை வழக்கில் கேரளாவை சேர்ந்த நிமிஷாவுக்கு ஜூலை 16ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என அந்நாட்டு சிறைத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுத்து தூக்கு தண்டணையை நிறுத்த உத்தரவிடக் கோரிக்கை வைத்து உச்சநீதிமன்றத்தில் கேரள செவிலியர் நிமிஷா தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவின் மீதான விசாரணை நாளை நடத்தப்படும் என உச்சநீதிமன்றம் தகவல் தெரிவித்துள்ளது.

நிமிஷா பிரியா, 2017ல் யேமன் குடிமகன் தலால் அப்தோ மஹ்தியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, 2020ல் சனாவில் உள்ள தொடக்க நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டார். 2023ல் யேமன் உச்ச நீதிமன்றம் அவரது மேல்முறையீட்டை நிராகரித்தது. தற்போது, ஜூலை 16ம் தேதி அன்று அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நிமிஷாவின் குடும்பமும் ஆதரவாளர்களும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தை சமாதானம் செய்ய 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை “ரத்தப் பணம்” செலுத்த முயற்சித்து வருகின்றனர். ஆனால் இதுவரை பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறவில்லை.

இந்தியாவின் கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் நிமிஷா பிரியா.36 வயதான இவர் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். நிமிஷா தனது நர்சிங் படிப்பை முடித்துவிட்டு 2011 இல் வேலைக்காக ஏமனுக்குச் சென்றார்.

ஏமனின் சனாவில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்த நிலையில், 2015-ல் உள்ளூர் கூட்டாளியான தலால் அப்தோ மெஹதியுடன் இணைந்து கிளினிக் தொடங்கினார். நிமிஷாவின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து, அவரை அச்சுறுத்தியதாகவும், நிதி மோசடி செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனைத் தொடர்ந்து, தனது பாஸ்போர்ட்டை மீட்க முயன்றபோது, தலாலுக்கு மயக்க மருந்து செலுத்தியதில் அளவுக்கு அதிகமான மருந்து செலுத்தப்பட்டு, அவர் இறந்துவிட்டார் என நிமிஷா வாக்குமூலம் அளித்துள்ளார். 2018-ல் நிமிஷா கைது செய்யப்பட்டு, 2020-ல் சனாவில் உள்ள நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பு 2023-ல் ஏமன் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது, 2024 டிசம்பர் 30-ல் யேமன் அதிபர் ரஷாத் அல்-அலிமி இந்த மரண தண்டனையை உறுதி செய்தார்.

இப்பொது, நிமிஷாவுக்கு ஜூலை 16ம் தேதி மரண தண்டனை நிறைவேற்ற கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரை மீட்டுவிட ‘Save Nimisha Priya Council’ என்ற அமைப்பு இறுதி முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகிறது. மறுபக்கம், இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்த வழக்கை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், நிமிஷாவின் குடும்பத்திற்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.