28 ஆண்டுகள் கழித்து கோவை குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளி கைது.!
Dinamaalai July 10, 2025 09:48 PM

 


தமிழ்நாட்டில் 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி ஏ.ராஜா . இவர் டெய்லராக இருந்த நிலையில்  26 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இவர், கோவை நகர காவல்துறையால் சத்தீஸ்கர் மாநிலத்தில்  கைது செய்யப்பட்டுள்ளார்.

1998 பிப்ரவரி 14 அன்று நடந்த இந்தத் தொடர் குண்டுவெடிப்பில் 58 பேர் உயிரிழந்தனர் மற்றும் 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ராஜா, தையல் தொழிலாளியாகவும், எம்பிராய்டரி வேலை செய்பவராகவும் இருந்தவர், குண்டுவெடிப்புக்கு முன் வெடிகுண்டுகளை தயாரித்து அல்-உம்மா உறுப்பினர்களுக்கு விநியோகித்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.


மேலும், கோவையில் வள்ளல் நகரில் வாடகை வீடு எடுத்து வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டு சேமிக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.  இவர் 1996-1997 காலகட்டத்தில் நாகூர், ரேஸ் கோர்ஸ் (கோவை), மற்றும் கரிமேடு (மதுரை)   இடங்களில் பதிவு செய்யப்பட்ட 3 கொலை வழக்குகளிலும் குற்றம்சாட்டப்பட்டவர்.
26 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த நிலையில், கோவை நகர காவல்துறையின் தீவிரவாத தடுப்பு பிரிவு, உளவுத்தகவல் அடிப்படையில் கர்நாடகாவில் இவரை கைது செய்து, புதன்கிழமை (ஜூலை 9, 2025) இரவு கோவைக்கு அழைத்து வந்து அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.