பிளஸ் 2 மாணவி பலாத்காரம்... திருமணமான வாலிபர் மீது வழக்குப்பதிவு!
Dinamaalai July 10, 2025 09:48 PM

 

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே பிளஸ்-2 மாணவியை பலாத்காரம் செய்த தொழிலாளி மீது போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.குளச்சல் அருகே உள்ள ரீத்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் தனிஸ் (25), வெல்டிங் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவியும், 10 மாதத்தில் ஒரு குழந்தையும் உண்டு. தனிஸ்க்கும் ஒரு பிளஸ்-2 மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த மாணவி பள்ளி முடிந்ததும் மாலையில் தட்டச்சு பயிற்சிக்கு செல்லும் போது அவரை தனிஸ் சந்தித்து பழகி வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று தனிஸ் சிறுமியிடம் குளச்சல் அருகே உள் பஸ் நிறுத்தத்திற்கு வருமாறு கூறியுள்ளார். அங்கு வந்த சிறுமியை மோட்டார் சைக்கிளில் ஏற்றி அருகே உள்ள தோப்புக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என தனிஸ் மிரட்டி அனுப்பி வைத்தார்.

இதன்பின்பு மாணவியின் நடவடிக்கையில் சிறு சிறு மாற்றம் ஏற்பட்டது. இதை கவனித்த தாயார் அவரிடம், ‘ஏன் இப்படி இருக்கிறாய்?’ என கேட்டார். அப்போது மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தாயார் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் தனலெட்சுமி விசாரணை நடத்தி தனிஸ் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்தார். இதற்கிடையே தனிஸ் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.