தானே, ஜூலை 10 : மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் பள்ளி மாணவிகளுக்கு மாதவிடாய் சோதனை (Thane School Menstruation Check) நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவிகளுக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பதை அறிந்து கொள்ள, அவர்களை நிர்வாணப்படுத்தி பள்ளி ஆசிரியர்கள் கொடுமைப்படுத்தி உள்ளனர். இந்த விஷயம் ஒட்டுமொத்த நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நவீன காலத்திற்கு உலக நாடுகள் சென்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், இந்தியாவில் இதுபோன்ற சம்பவங்கள் இன்னும் தொடர்வது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தின் ஷாஹாபூர் பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 2025 ஜூலை 8ஆம் தேதி மாணவ, மாணவிகள் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளனர்.
அப்போது, பள்ளியின் கழிவறையில் ரத்தக்கறை கண்டதாக பள்ளி ஊழியர் ஒருவர் ஆசிரியர்களிடம் கூறியதாக தெரிகிறது. இதனை அடுத்து, ஆசிரியர்கள் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளிடம் மாதவிடாய் இருக்கிறதா இல்லையா என்பது குறித்து ஆடைகளை கழற்றி சோதனையிட்டுள்ளார். முதலில், மாணவிகளிடம் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். இதற்கு அவர்கள் பதிலளிக்காததால், மாணவிகளை ஒவ்வொருவராக கழிப்பறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களின் ஆடைகளை கழற்றி நிர்வாணப்படுத்தி, அவர்கள் அந்தரங்க உறுப்புகளில் தொட்டு சோதனையிட்டதாக தெரிகிறது.
Also Read : லிஃப்டில் சிறுவனை சரமாரியாக தாக்கி, கையை பிடித்து கடித்த நபர்.. ஷாக் சம்பவம்!
பள்ளி மாணவிகளுக்கு மாதவிடாய் சோதனைஇதுகுறித்து மாணவி ஒருவர் பெற்றோரிடம் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனை அடுத்து, பெற்றோர்கள் பள்ளிகளில் முற்றுகையிட்டு போராட்டத்தை நடத்தினர். மேலும், மாணவிகளுக்கு நடந்த கொடுமை குறித்து குழந்தை உரிமை ஆர்வலர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
இதனை அடுத்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினர். மேலும், இதுகுறித்து காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போக்சோ உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, பள்ளியின் முதல்வர், நான்கு ஆசிரியர்கள், உதவியாளர் மற்றும் இரண்டு அறங்காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக பள்ளி முதல்வர் உட்பட இரண்டு பேர் கைதாகி உள்ளனர்.
பள்ளியில் நடந்த இதுபோன்ற கொடூரத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், பள்ளிகளில் மாணவிகளுக்கு மாதவிடாய் சோதனை செய்யப்பட்ட சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Also Read : தொழிலாளர்களின் வேலை நேரம் இனி 10 மணிநேரம்.. தெலுங்கானா அரசு அறிவிப்பு..!
இந்த சம்பவத்தை கண்டித்து, பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் பள்ளிகளில் மீண்டும் நடைபெறக் கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. நவீனத்தை நோக்கி உலக நாடுகள் முன்னோக்கி சென்றுக் கொண்டிருக்கும் காலத்தில், மகாராஷ்டிராவில் நடந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.