Cinema Rewind: நிறையக் கஷ்டங்கள்.. விஜய் சேதுபதிக்கு நடந்த சம்பவம்!
Tv9 Tamil July 10, 2025 10:48 PM

நடிகர் விஜய் சேதுபதியின் (Vijay Sethupathi) முன்னணி நடிப்பில் தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகியிருக்கிறது. இவர் சினிமாவில் ஆரம்பத்தில் அங்கீகரிக்கப்படாத கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். மேலும் மற்ற நடிகர்களின் படத்தில் துணை வேடத்திலும் நடித்து சினிமாவில் பிரபலமானார் விஜய் சேதுபதி.  ஆரம்பத்தில் நடிகர் தனுஷின் (Dhanush) நடிப்பில் வெளியான புதுப்பேட்டை (Pudhupettai) என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தைக் கடந்த 2006ம் ஆண்டு இயக்குநர் செல்வராகவன் இயக்கியிருந்தார். இந்த படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் விஜய் சேதுபதி துணை வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தைத் தொடர்ந்து இவர் நடிகராக அறிமுகமான திரைப்படம் தென்மேற்கு பருவக்காற்று (Thenmerku Paruvakaatru). கடந்த 2010ம் ஆண்டு வெளியான இப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமி இயக்கியிருந்தார் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி  அருமையாக நடித்திருந்த நிலையில், அடுத்தடுத்த படங்களிலும் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார்.

இவருக்கும் மக்கள் மத்தியில் பிரபல கொடுத்த படமாக அமைந்தது பீட்சா. இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் இப்படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இதைத் தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதி, தமிழ் சினிமாவையும் கடந்து, தெலுங்கு சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

இதையும் படிங்க :சினிமாவில் நடித்ததால் கிடைத்த மரியாதை.. மேடையில் ஓபனாக பேசிய சிவகார்த்திகேயன்!

மேலும் இந்தி படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவர் முன்னதாக பேசிய நிகழ்ச்சி ஒன்றி ல் சினிமாவின் ஆரம்பத்தில் கஷ்டப்பட்டது குறித்தும், நண்பர்கள் பாகுபாடு காட்டியது குறித்தும் ஓபனாக பேசியுள்ளார். அது குறித்து பார்க்கலாம்.

சினிமா நுழைவின் கஷ்டம் பற்றி பேசிய விஜய் சேதுபதி :

அந்த நிகழ்ச்சியில், “நான் சினிமாவில் நடிகராக ட்ரைபண்ணும்போது எனக்கு 23 வயது. நான் சினிமாவில் நடிக்கவரும்போது எனது நண்பர்கள் என்னைக் கிண்டல் பண்ணுவார்கள். உனக்கு என்ன தெரியும் என நடிக்கப் போகிறாய், உனக்கு டான்ஸ் ஆட தெரியுமா?, நல்ல நடிக்கத் தெரியுமா எனக் கூறினார்கள். நான் அவர்களிடம் இதில் எதுவும் எனக்குத் தெரியாதுதான், ஆனால் எனது 40 வயதில் ஒரு சீரியல் தொடரிலாவது நடித்துவிடுவேன் என கூறினேன். அவ்வாறுதான் சினிமாவில் நுழைந்தேன், அப்படியும் அடுத்த கட்டத்திற்கு வாழ்க்கை செல்லாதது போல தான் இருந்தது, பின் வாழ்க்கை மாறியது. நான் வரும்போது எனது மனைவி நடிப்பதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. மிகவும் பயந்தார்.

இதையும் படிங்க :மங்காத்தா படத்திற்கு 2 கதை… இயக்குநர் வெங்கட் பிரபு சொன்ன உண்மை!

அதனால் நிறைய பொய்கள் சொன்னேன், நடித்தேன். வேறு வழியில்லாமல் இதையெல்லாம் செய்தேன். ஏனென்றால் அவர் அப்போது கர்ப்பமாக இருந்தார். அவரையும் கஷ்டப்படுத்தக் கூடாது என இருந்தேன். அப்போது நான் நினைத்தேன் 5 வருடம்தான் டைம் இருக்கிறது. குழந்தை பிறந்துவிட்டால் அடுத்தடுத்து, அதன் வாழ்க்கையைப் பார்ப்பதற்காக நான் ஓடவேண்டும், அதனால் அந்த 5 வருடத்தில் விடாமல் சினிமாவில் நுழைய முயற்சி செய்யவேண்டும் என நினைத்தேன். 5 வருடத்தில் முயற்சி செய்யாமல் 50 வயதில் கஷ்டப்படுவதற்கு, ஒரேயடியாக முயற்சி செய்யலாம் என தான் சினிமாவில் நுழைந்தேன்” என நடிகர் விஜய் சேதுபதி பேசியிருந்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.