கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நயன்தாரா (Nayanthara) . மேலும் இவர்தான் தென்னிந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் இருந்து வருகிறார். மலையாள சினிமாவின் மூலம் கதாநாயகியாக நுழைந்த இவருக்கு, தமிழ் சினிமாவில் ஆதரவு அதிகமாகியது. இயக்குநர் ஹரியின் (Hari) இயக்கத்தில் வெளியான ஐயா (Aiyya) படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக நுழைந்தார். அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் முன்னணி நடிகையாக நடித்து வந்தார். இவை தமிழில் விஜய் (Vijay) முதல் அஜித் குமார் (Ajith Kumar) வரை முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தற்போது சினிமாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார். மேலும் முன்னணி நடிகர்களுடனும் படங்களில் நடித்துவருகிறார்.
தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளிலும் படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார் இவர். மேலும் இவரின் நடிப்பில் இறுதியாக டெஸ்ட் (Test) என்ற திரைப்படம் வெளியானது. இப்படத்தில் நடிகர் மாதவனுக்கு (Madhavan) ஜோடியாக நடித்திருந்தார். இப்படமானது நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியிருந்தது. இந்நிலையில், முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசிய நயன்தாரா, காரணமில்லாமல் திரிஷா கிருஷ்ணனுடன் (Trisha Krishnan) பேசுவது நின்றது குறித்தும், மீண்டும் அவருடன் பேசியது குறித்தும் வெளிப்படையாக தெரிவித்தார்.
Also Read:பேச்சுலர் பட இயக்குநருடன் இணையும் நடிகர் விஷ்ணு விஷால்!
திரிஷா கிருஷ்ணன் பற்றி நயன்தாரா பேச்சு :நேர்காணல் ஒன்றில், அவரிடம் திரிஷா கிருஷ்ணின் நட்பு தொடர்பாகக் கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் பேசிய நயன்தாரா, “நானும் திரிஷாவும் படங்களில் ஆரம்பத்தில் நடிக்கும்போது, நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். ஒரே துறையில் இருப்பதாலோ அல்லது எந்த காரணத்தினாலே எங்கள் இருவருக்குள் பேச்சுவார்த்தை நின்றது. ஏன் என்று எங்களுக்கே தெரியவில்லை. சில தவறான புரிதல்களால் எங்களின் பேச்சுவார்த்தை நின்றது. உண்மையை சொல்லப்போனால் காரணமே இல்லாமல் நாங்கள் இருவரும் பல நாட்களாகப் பேசிக்கொள்ளவே இல்லை. நானும் பேசவேண்டும் என்று முயற்சியை எடுக்கவில்லை, திரிஷாவும் அதேதான் செய்தார்.
Also Read:குழந்தைகளை ஹைப்பர் ஆக்டிவ் என்பதும் வன்முறைதான்.. இயக்குநர் ராம்!
அப்படியே எங்கள் இருவருக்குள் பேச்சு வார்த்தையை இல்லாமல் போனது. பல நாட்களுக்குப் பின் நான் திரிஷாவை ஒரு திரைப்பட விருது விழாவில் பார்த்தேன். அப்போதுதான் பேசிக்கொண்டோம் , அதில் முதலில் என்னிடம் திரிஷாதான் வந்து பேசினார். இதற்கு முன் சாதாரணமாக எங்கு பார்த்தாலும், பேசிக்கொள்ளாமல்தான் இருந்தோம். ஆனால் அந்த திரைப்பட விருது விழாவில் திரிஷாவே என்னிடம் வந்து பேசினார். அப்போதே நாங்கள் மீண்டும் பேச தொடங்கிவிட்டோம். மேலும் மீண்டும் நாங்கள் இணைந்ததற்கு ஒரு போட்டோ கூட சாட்சியாக இருக்கிறது” என்று நடிகை நயன்தாரா ஓபனாக பேசியிருந்தார்.