நாசரேத் அருகே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த வாலிபர் சடலத்தை மீட்டு ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் - ஆழ்வார்திருநகரி இடையே தண்டவாளத்தில் திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற ரயிலில் ஆண் ஒருவர் அடிபட்டு கை மற்றும் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபருக்கு சுமார் 45 வயது இருக்கும். மஞ்சள் நிற சட்டை அணிந்துள்ளார். அவர் யார்? ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி இறந்தாரா? அல்லது மரணத்திற்கு வேறு எதுவும் காரணம் உள்ளதா என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?