நடிகர்களுக்கு மட்டும் கிடைக்கும் சலுகை நடிகைகளுக்கு கிடைப்பதில்லை: பாலிவுட் நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு..!
Seithipunal Tamil July 28, 2025 07:48 AM

பிரபல இந்தி நடிகையான ராதிகா மதன், சினிமாவில் நடிகர்களுக்கு வழங்கப்படும் சலுகை, நடிகைகளுக்கு கிடைப்பது இல்லை என வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியுள்ளதாவது:

தான் ஒருநாளைக்கு 12 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை சினிமாவில் நடிக்கிறேன். இயக்குநர் சொல்வது போல் உழைக்கிறேன். ஆனால், சில நடிகர்-நடிகைகளுக்கு அப்படி உழைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. சில நடிகர்கள் எல்லாம் 08 மணி நேரம் கூட பங்களிப்பு தருவது கிடையாது என்று குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன், பெண்கள் எங்கள் சூழ்நிலையை சொல்லி அனுமதி கேட்டால் கூட கிடைப்பதில்லை. ஆனால் அதே நடிகர்கள் கேட்டால் உடனடியாக அனுமதி வழங்கப்படுகிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார். இதனால், நடிகர்களுக்கு வழங்கப்படும் சலுகை, நடிகைகளுக்கு கிடைப்பது இல்லை. இந்த நிலை மாறினால் மட்டுமே சினிமா முன்னேறும் என்று கூறியுள்ளமை பாலிவுட் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.