இன்று ஜூலை 28ம் தேதி, விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு, உள்ளூர் மக்களும் திருவிழாவில் கலந்துக் கொள்ள வசதியாக உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து இன்று 8ம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை தினத்தை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்டு 9ம் தேதியை வேலை நாளாகவும் மாவட்ட கலெக்டர் சுகபுத்ரா தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில், விருதுநகரில் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும், முக்கிய அரசு அலுவலகங்கள், அரசு கருவூலங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்கும் என்று மாவட்ட கலெக்டர் சுகபுத்ரா தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?