தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்து வரும் நிலையில் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, தென்காசி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் மழை எதிர்பார்த்ததை காட்டிலும் அதிக அளவு பெய்துள்ளது. இருந்தாலும் கூட, விருதுநகர், திருச்சி, தூத்துக்குடி, திருப்பூர், கரூர், காரைக்கால், கள்ளக்குறிச்சி, ஈரோடு, திண்டுக்கல் மாவட்டங்களில் மழை எதிர்பார்த்ததை விட வெகு குறைவாகவே பெய்துள்ளது.
இந்நிலையில் நீலகிரி மற்றும் கோவையில் இன்று கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பில் "குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது. மேலும், மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூலை.28 மற்றும் 29ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். ஜூலை.30 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?