பீகாரில் அடுத்த சில மாதங்களில் சட்டசபை தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ராஷ்டிரீய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் மகனும், முன்னாள் அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவ் வர உள்ள சட்டசபை தேர்தலில் வைஷாலி மாவட்டத்தில் உள்ள மகுவா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
அவருக்கு மக்களின் ஆதரவு உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன், அடுத்த பீகாரின் முதலமைச்சராக நிதிஷ்குமார் வரமாட்டார் என்று தான் உறுதியாக நம்புவதாக தெரிவித்துள்ளார்.
தேஜ் பிரதாப் யாதவ் தற்போது சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள ஹசன்பூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக உள்ளார். அவர் அனுஷ்கா என்ற பெண்ணுடன் தவறான உறவில் இருந்ததாக சமூக ஊடகங்களில் அவர் பதிவு வெளியிட்டதை தொடர்ந்து, அவரை கடந்த மே மாதம் அவரது தந்தை லாலு பிரசாத் குடும்பத்தில் இருந்து நீக்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட அறிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.