மருத்துவமனையில் இருந்து 7 நாட்களுக்குப் பிறகு இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு திரும்பி உள்ளார்.
இந்நிலையில், முதலமைச்சர் முக ஸ்டாலின் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "நலம்பெற்று வீடு திரும்பினேன்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அக்கறையுடன் விசாரித்து, நலம் பெற வாழ்த்திய அனைத்து அரசியல் இயக்கத் தலைவர்கள் - மக்கள் பிரதிநிதிகள் - நீதியரசர்கள் - அரசு அதிகாரிகள் - திரைக் கலைஞர்கள் - என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சையளித்து, நான் விரைந்து நலம்பெற உறுதுணையாய் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மீண்டும் அன்பும், நன்றியும்!
உங்களுக்காக உழைப்பை வழங்கும் என் கடமையை என்றும் தொடர்வேன்" என்று தெரிவித்துள்ளார்.