பொதுவாக அத்தி பழத்தில் நிறைய வைட்டமின் ,கால்சியம் ,மற்றும் புரத சத்துக்கள் அடங்கியுள்ளது .இந்த பழத்தினை தொடர்ந்து ஒருவர் சாப்பிட்டு வந்தால் அவருக்கு என்ன நன்மை கிடைக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.சிலருக்கு பற்களின் ஈறுகள் சீழ்பிடித்திருக்கும் . இப்படி இருந்தாலோ அல்லது வலித்தாலோ அத்தி பழத்தின் இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளித்தால் நிவாரணம் கிடைக்கும் .
2.சிலருக்கு பித்தம் காரணமாக உடலில் உஷ்னம் அதிகமாகும் .இதற்கு அத்தி மர இலைகளை வெயிலில் உலர வைத்து தூள் ஆக்கி தேனில் கலந்து சாப்பிட்டு வர பித்தம் மற்றும் அதனால் வரும் நோய்களும் குனமாகும்.
3.மேலும் சர்க்கரை நோய், சர்க்கரைப் புண், உடல் வீக்கம், கட்டிகள், போன்ற பிரச்சினை உள்ளோருக்கு அத்தி பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.
4.சிலருக்கு மூட்டு வலி இருக்கும் .இந்த வியாதிக்கு இம்மரத்தின் பட்டையை ஊற வைத்து காலையில் குடிநீராக குடித்தால் வாத நோய், மூட்டு வலிகள் குணமாகி விடும்
5.சிலருக்கு பைல்ஸ் பிரச்சினை இருக்கும் .அவர்கள் அத்தி பழத்தை சாறு பிழிந்து அந்த சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மூல நோய் குணமாகும்.
6.மற்ற பழங்களைக் காட்டிலும் அத்திப் பழத்தில் 2 முதல் 4 மடங்கு அதிகமாக தாது உப்புகளும், சத்துப் பொருட்களும் அடங்கியிருக்கின்றன.