இன்று அதிமுக எம்.பி.க்கள் இன்பதுரை, தனபால் பதவியேற்பு!
Dinamaalai July 28, 2025 05:48 PM

 


 
அதிமுகவின் இன்பதுரை, தனபால்  இருவரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக இன்று ஜூலை 28ம் தேதி  திங்கட்கிழமை பதவியேற்க உள்ளனர். அதன்படி  இன்று காலை 11 மணிக்கு மாநிலங்களவையில் பதவியேற்பு நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, திமுக சாா்பில் பி.வில்சன், கவிஞா் சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை எம்பிக்களாக பதவியேற்ற நிலையில் இன்று அதிமுகவைச் சேர்ந்தவர்கள் பதவியேற்கின்றனர்.

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்குத் தோ்வான வைகோ, பி.வில்சன், சண்முகம், எம்.எம்.அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன் இவர்களது பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில்   6 இடங்களுக்கான தோ்தல் அறிவிக்கப்பட்டது. திமுக, அதிமுக, ம.நீ.ம.வைச் சோ்ந்த 6 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனர். திமுக சாா்பில் பி.வில்சன், கவிஞா் சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் இவர்களுடன்  அதிமுக சாா்பில் தனபால், ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.