படுக்கையில் திருப்தி இல்ல…! “கணவரை கொலை செய்து நாடகம்…” காதலனுடன் உல்லாசமாக இருந்து கர்ப்பத்தை கலைத்த மனைவி…. பகீர் பின்னணி….!!
SeithiSolai Tamil July 28, 2025 11:48 AM

“கணவர் திருப்தி செய்யவில்லை” எனக் கூறி, அவரை கத்தியால் குத்தி கொலை செய்த மனைவியை டெல்லி போலீசார் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம் பரேலி பகுதியைச் சேர்ந்த ஃபர்சானா (29) மற்றும் டெல்லி நிஹால் விகார் பகுதியைச் சேர்ந்த முகம்மது ஷாஹித் இர்ஃபான் (32) ஆகியோர் 2022-ம் ஆண்டு நவம்பரில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பின் ஃபர்சானா கணவர் வீட்டில் டெல்லியில் தங்கியிருந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, ஷாஹித் பலத்த கத்திக்குத்து காயங்களுடன் சஞ்சய் காந்தி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டபோது அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார். ஆரம்பத்தில் ஃபர்சானா, “ஷாஹித் சூதாட்டத்தால் கடனில் சிக்கி மன உளைச்சலால் தன்னைத் தானே குத்திக்கொண்டு தற்கொலை செய்தார்” என்று போலீசில் தகவல் அளித்திருந்தார்.

ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் ஷாஹித் உடலில் மூன்று தனித்தனி கத்திக்குத்துகள் இருப்பதோடு, அவை அனைத்தும் வேறு வேறு கோணங்களில் உள்ளதாகவும், அதில் ஒன்று மிகவும் ஆழமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஒருவர் தன்னைத் தானே இவ்வளவு ஆழமாக குத்த முடியாது என மருத்துவர்கள் உறுதியளித்ததை அடுத்து, போலீசார் ஃபர்சானாவின் மொபைலை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

அதில், “தூக்கமருந்து கொண்டு ஒருவர் எப்படி கொல்லப்படலாம்?”, “சாட் டெலீட் செய்வது எப்படி?” என கூகுள் தேடல்கள் உள்ளதைக் கண்டுபிடித்தனர். இதனால் போலீசார் நடத்திய விசாரணையில் அழுதபடி “ஷாஹித்தை நான் தான் கொலை செய்தேன்” என ஃபர்சானா ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

கொலையின் காரணமாக, “கணவர் திருமண வாழ்க்கையில் திருப்தி தரவில்லை; கற்பனைக்கேற்ப உடல் உறவில்லையெனவும், கடனில் மூழ்கியவராக இருந்தார்; எனவே அவர் உறவினரான பரேலி பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் நான் கள்ளத் தொடர்பில் இருந்தேன்” என போலீசிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்நிலையில், ஃபர்சானா தனது கணவரிடம் சொல்லாமல் கர்ப்பம் கலைத்ததாகவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஷாஹித் உடலுறவில் திறனற்றவர் என கூறும் குற்றச்சாட்டு சந்தேகத்துக்குரியதாக இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது, கள்ளக்காதலனாக கூறப்படும் ஷாஹித்தின் உறவினருக்கும் இந்த கொலையில் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்காக தனிப்படை போலீசார் பரேலிக்கு விரைந்துள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.