வனத்தில் மட்டுமல்ல, மனிதர்களிடமும் மகிழ்ச்சியுடன் பழகும் குட்டி யானைகளின் வீடியோக்கள் பல நேரங்களில் நம் மனதை உருக்கும். அந்த வரிசையில், தற்போது இணையத்தில் பரவி வரும் ஒரு புதிய வீடியோ, குட்டி யானையின் அன்பும் சதுர்யமும் கொண்ட சிரிப்பூட்டும் காட்சியாக உள்ளது.
@amazingnature என்ற X பக்கம் வெளியிட்ட வீடியோவில், ஒரு வயதுடைய யானை குட்டி, ஒரு ஆண் மற்றும் பெண் அருகில் மெல்ல வந்து, தனது முன் கால்களை அந்த ஆணின் தோள்களில் வைத்து, விளையாடுகிறது.
அந்த ஆண் மற்றும் பெண் இருவரும் அதிர்ச்சி மற்றும் மகிழ்ச்சியில் சிரித்தபடி, யானையின் அன்பை அனுபவிக்கின்றனர். “யானை தன்னுடைய எடையோ, அளவோ தெரியாமல் குழந்தைப் போல் மனிதர்களை அன்புடன் கட்டிப்பிடிக்கிறது” என்பது இந்த வீடியோவின் சிறப்பு.
“குட்டி யானைக்கு தன்னுடைய அளவு பற்றிய எந்தத் தெளிவும் இல்லையே… அதான் cute!”
மற்றொருவர், “இவை சின்ன குழந்தைகள் போல தான்… உடம்பு மட்டும் ஜைன்ட்! என கருத்தை பதிவிட்டுள்ளார்.