கர்நாடகாவில் அரசு பஸ்சுக்கு வழிவிடாமல் தாறுமாறாக பைக் ஓட்டிய 02 வாலிபர்கள்: இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி..!
Seithipunal Tamil July 28, 2025 11:48 AM

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பால்பாவிலிருந்து சுப்பிரமணியாவுக்கு அரசு பஸ் (கே.எஸ்.ஆர்.டி.சி.) சுப்பிரமணியா அருகே சென்றபோது ஒரு மோட்டார் சைக்கிள் சென்ற 02 வாலிபர்கள்  பஸ்ஸின் முன்னாள் பயணித்துள்ளனர்.

இவ்வாறு பஸ்சுக்கு வழிவிடாமல் மோட்டார் சைக்கிளை சாலையில் குறித்த வாலிபர்கள் தாறுமாறாக ஓட்டிச் சென்றுள்ளனர். இதனால் பஸ் டிரைவர் பஸ்சை ஒட்ட முடியாமல் சிரமப்பட்டுள்ளார். இந்த 02 வாலிபர்கள் சாலையில் மோட்டார் சைக்கிளை தாறுமாறாக ஓட்டிச் சென்றதை பஸ்சில் பயணித்தவர்கள் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.

அவர்கள் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள நிலையில், வைரலாகி வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சுப்பிரமணியா போலீசார் மோட்டார் சைக்கிளின் எண்ணை வைத்து அந்த வாலிபர்களை பிடித்து கடுமையாக எச்சரித்துள்ளனர். அவர்களுக்கு அபராதமும் விதித்துள்ளனர். மீண்டும் இதுபோன்று சம்பவங்களில் ஈடுபடக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.