சூட்டைக் கிளப்பிய பஹல்காம் விவாதம் `டு' மத்திய அரசைக் கண்டித்த ஓபிஎஸ் - Daily Roundup 29-07-2025
Vikatan July 30, 2025 06:48 AM
  • ``இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தத்ததை செய்ததாக 26 முறை அமெரிக்க அதிபர் தெரிவித்திருக்கிறார். அதிபர் ட்ரம்ப் பொய் சொல்கிறார். அவர் ஒரு பொய்யர் என்று மட்டும் சொல்லுங்கள் பார்க்கலாம்" என நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி காட்டமாக விமர்சித்தார்.

  • காங்கிரஸ் இப்போது பாகிஸ்தானின் ரிமோட் கண்ட்ரோல் மூலம் செயல்படுகிறது என காங்கிரஸை பிரதமர் மோடி விமர்சித்திருக்கிறார்.

  • ``என்னுடைய தந்தை தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார். நான் இப்போது உயிரிழந்த 26 பேர் குறித்து பேசுகிறேன் என்றால், நான் அவர்களது வலியை உணர்கிறேன்" என பிரியாங்கா காந்தி நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

மோடி
  • பஹல்காம் தாக்குதல் குறித்த விவகாரத்தில் 'இன்று, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருப்பது ஜவஹர்லால் நேருவினால் மட்டுமே...' என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருக்கிறார்.

  • ``எப்போது தாக்குதல் நடந்தாலும் இனிமேல் நடக்காது என்கிறீர்கள்... அப்படியென்றால், விஷ்வகுரு என்ன கற்றுக்கொண்டார்" என பிரதமர் மோடியை எம்.பி கனிமொழி விமர்சித்திருக்கிறார்.

  • ஜூலை 30, 2025 அன்று '2025 OL1' என்ற விமான அளவிலான சிறுகோள் பூமியை நெருக்கமாகக் கடந்து செல்லும். பூமிக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என நாசா தெரிவித்துள்ளது.

  • விஜய் இல்லாமல் LCU முழுமை பெறாது. ஆனால், அவர் உள்ளே வருகிறாரா? இல்லையா? என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருக்கிறார்.

  • மசோதாக்கள் மீது முடிவெடுக்க கால வரம்பு நிர்ணயித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் உச்ச நீதிமன்றத்துக்கு இல்லை என திமுக, உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறது.

  • சமக்ரா சிக்க்ஷா திட்டத்தின்கீழ் நிதியை விடுவிக்காதது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. கடும் கண்டனத்திற்குரியது என மத்திய பா.ஜ.க அரசை ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்திருக்கிறார்.

விஜய்- லோகேஷ் கனகராஜ்
  • தாராபுரத்தில் வழக்கறிஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், பள்ளியின் தாளாளர் உட்பட கூலிப்படையைச் சேர்ந்த 6 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

  • ஏமனில் கைது செய்யப்பட்ட கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது என கிராண்ட் முஃப்தி ஏ.பி அபுபக்கர் முஸ்லியார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

  • ஓபிஎஸ் என்னிடம் கேட்டிருந்தால் பிரதமரை சந்திக்க நேரம் வாங்கித் தந்திருப்பேன் என பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார்.

  • பள்ளி வேனில் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வேன் உரிமையாளர் மற்றும் ஓட்டுநருக்கு 4 வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியிருக்கிறது ராணிப்பேட்டை நீதிமன்றம்.

  • குஜராத்தில் பெண் டாக்டரை டிஜிட்டல் முறையில் கைது செய்த சைபர் கிரைம் குற்றவாளிகள், 3 மாதத்தில் ரூ.19 கோடியை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

  • தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.தி.மு.க, பாஜக உள்ளது, பாஜக கூட்டணியில் பல கட்சிகள் இருக்கின்றன. தேர்தல் அறிவித்த பின் கூட்டணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை தெளிவாக அறிவிப்பேன் என எடப்பாடி தெரிவித்திருக்கிறார்.

  • நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை விமர்சித்ததற்காக சு.வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்துக்கு கண்டனங்கள் வலுத்துவருகிறது.

கவின் குமார்
  • புதுச்சேரியில் 2023-24 கல்வியாண்டில் 10,000 மாணவர்கள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியிருப்பதாக, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

  • திருநெல்வேலியில் ஐடி ஊழியர் கவின்குமார் படுகொலை செய்யப்பட்டது குறித்து மாரி செல்வராஜ், ஜி.வி பிரகாஷ், நடிகர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

  • சதுரகிரி மலைப்பகுதியில் 2வது நாளாக காட்டுத் தீ வேகமாய் பரவி வருகிறது. 20க்கும் மேற்பட்ட வனத்துறை மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  • திருவாரூரில் காதலி பேச மறுத்ததால் காதலன் நண்பர்களுடன் காதலி வீட்டுக்கு சென்று அடிதடியில் ஈடுபட்டுள்ளார். இதில் சண்டையை விலக்க சென்றவரை கத்தியால் குத்தியதில் நீதிமன்ற ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர்: "இந்தியாவை கோழை நாடாக்கியிருக்கிறீர்கள்" - சு.வெங்கடேசனின் கணீர் கேள்விகள் Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.