ITR Filing: நீங்களே ஆன்லைனில் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வது எப்படி? |Step by Step Explained
Vikatan July 30, 2025 10:48 PM

இந்த ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி வரை வருமான வரித் தாக்கல் செய்யலாம் என்று வருமான வரித் துறை அறிவித்துள்ளது.

வருமான வரித் தாக்கலை நாமே ஆன்லைனில் எளிதாக செய்ய முடியும்... அது எப்படி என்கிற ஸ்டெப் பை ஸ்டெப் பிராசஸைப் பார்க்கலாம்... வாங்க...

> www.incometax.gov.in என்கிற வருமான வரி இணையதளத்திற்குள் செல்லவும்.

> முகப்பு பக்கத்தில் இருக்கும், 'Log in'-ஐ கிளிக் செய்து, உங்களது பான் எண் அல்லது ஏதேனும் ஒரு அரசு ஐ.டி நம்பரை உள்ளீடு செய்யவும். முதன்முறையாக, இந்த இணையதளத்திற்குள் வருபவர்கள் 'Register'-ஐ தட்டி, புதிதாக பதிவு செய்துகொள்ளலாம்.

> இப்போது ஓப்பன் ஆகும் பக்கத்தில், 'Assesment Year'-ல் '2025 - 2026'-ஐ க்ளிக் செய்யவும்.

> அடுத்ததாக, 'Select Mode of Filing'-ல் 'Online'-ஐ தட்டவும்.

> 'Start New Filing' என்கிற ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள்.

வருமான வரி கணக்குத் தாக்கல்

> தனிநபர் (Individual), இந்து கூட்டுக் குடும்பம் (HUF), பிற (Others) என்று மூன்று ஆப்ஷன்கள் காட்டும். அதில், நீங்கள் தனிநபர் எனில் ‘Individual' என்கிற ஆப்ஷனைத் தேர்வு செய்யவும்.

> இங்கே, உங்களது வருமான வரிப் படிவத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் சம்பளதாரர்கள் எனில், 'ITR 1'-யும், மியூச்சுவல் ஃபண்ட் வருமானம், பங்கு வருமானம், வெளிநாட்டு வருமானம், விவசாய வருமானம் போன்ற வருமானம் உள்ளவர்கள் 'ITR 2'-யும் தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்து, 'Proceed'.

ITR Filing: வருமான வரி தாக்கலில் லேட்டஸ்ட் அப்டேட்டுகள் என்னென்ன? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!

> இப்போது, 'Let's Get Started’-ஐ தட்டுங்கள்.

> அடுத்ததாக, நீங்கள் எதற்காக வருமான வரி தாக்கல் செய்கிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுங்கள்.

> அடுத்த பக்கத்தில், அங்கே கொடுக்கப்பட்டுள்ள தனிநபர் விவரங்கள் சரியா என்பதை செக் செய்துகொள்ளவும். எதாவது மாற்றங்கள் இருந்தால், அதை இங்கேயே செய்துகொள்ளுங்கள். அடுத்து, 'Confirm'.

> இரண்டாவதாக இருக்கும் உங்களது மொத்த வருமானம் குறித்த விவரங்களை சரிபார்க்கவும்.

> மூன்றாவதாக இருக்கும் 'Total Deductions'-ஐ செக் செய்யவும்.

> 'Tax Paid' ஆப்ஷனில் நீங்கள் செலுத்திய TDS, TCS போன்ற விவரங்களை சரிபார்க்கவும்.

வருமான வரி கணக்குத் தாக்கல்

> 'Verify your tax liability details'-ல் வருமானக் கணக்கீடு மற்றும் வரிக் கணக்கீட்டை செக் செய்யவும்.

> இப்போது 'Proceed to Verification'-ஐ க்ளிக் செய்யுங்கள்.

> இப்போது ஓப்பன் ஆகும் பக்கத்தில், நீங்கள் செலுத்த வேண்டிய வரி விவரங்கள் வரும்.

> 'Preview and Submit the Return' க்ளிக் செய்யுங்கள்.> இந்தப் பக்கத்தில் அனைத்துத் தகவல்களையும் சரிபாருங்கள்.

> இங்கே வருமான வரிப் படிவத்தை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

> 'Proceed to Validation'-ஐ க்ளிக் செய்யுங்கள்.

> 'Validation Successful' என வந்தப் பின் 'Proceed to Verification'-ஐ க்ளிக் செய்யுங்கள்.

> இங்கே 'e-Verify now'-ஐ தட்டுங்கள்.

> மொபைல் எண்ணிற்கு வரும் OTP-ஐ பதிவிட்டுக் கொள்ளுங்கள்.

> அடுத்து, 'Submit'.

> இப்போது உங்களது வருமான வரித் தாக்கல் பிராசஸ் சக்சஸ். இங்கேயே உங்களது ரெசிப்டை டவுன்லோட் செய்யலாம் அல்லது உங்கள் மெயிலுக்கும் இந்த ரெசிப்ட் வரும்.

ITR Filing: ஆன்லைனில் செய்வது எப்படி, செய்யக்கூடாத தவறுகள், அபராதங்கள், வரிச் சலுகை... - முழு தகவல்

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.