மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் 2008ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் சிறப்பு NIA நீதிமன்றம் இன்று (ஜூலை 31) தீர்ப்பு வழங்குகிறது.
கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 29தேதி மாலேகானின் பிக்கூ சௌக் மசூதி அருகேமோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்ட குறைந்த சக்தி கொண்ட குண்டு வெடித்தது.
இந்த குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழப்பு, 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் .குற்றச்சாட்டுகள் மற்றும் கைது,இந்து வலதுசாரி அமைப்புகளுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டனர்.
இதில் முக்கிய குற்றவாளிகள்:முன்னாள் பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர்முன்னாள் ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோஹித் ஆவர்,
குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பிரக்யா தாக்கூர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது.அபினவ் பாரத் என்ற இந்து தீவிரவாத அமைப்புக்கு ஆதரவு மற்றும் வெடிபொருட்கள் வழங்கியதாக புரோஹித் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து நடந்த விசாரணை நிலையில் ஆரம்பத்தில் மகாராஷ்டிர ATS விசாரணை செய்தது.2011-ல் வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டது.
இதையடுத்து 2018-ல் பிரக்யா சிங் தாக்கூர் உள்பட 7 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.சாட்சிகள் மற்றும் சிக்கல்கள்,323 அரசுத் தரப்பு சாட்சிகள், 8 பாதுகாப்புத் தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.
சுமார் 40 சாட்சிகள் தங்கள் வாக்குமூலத்தை மாற்றினர்.தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு முன் நீதிபதி மாற்றம் ஏற்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.தீர்ப்பு அரசியல் தாக்கம்.இந்த வழக்கு அரசியலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.தீர்ப்பு இன்று வெளிவரவிருக்கிறது.