இன்றைய காலகட்டத்தில் யுபிஐ பண பரிவர்த்தனைகளை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பெரும்பாலும் யுபிஐ பணம் பரிவர்த்தனைகள் என்பது சுலபமாக இருப்பதால் அனைவரும் பயன்படுத்துகிறார்கள். பொதுமக்களுக்கும் இந்த முறை மிகவும் சுலபமாக இருப்பதால் ஏராளமானோர் விரும்புகிறார்கள்.
இதன் காரணமாக யூபிஐ பண பரிவர்த்தனைகளில் அடிக்கடி புதிய அப்டேட்டுகள் கொண்டுவரப்படுகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் கூகுள் பே மற்றும் போன் பே, பேடிஎம் ஆகிய நிறுவனங்கள் புதிய பண பரிவர்த்தனை முறைகளை அறிமுகப்படுத்த இருக்கிறது.
அதாவது யுபிஐ கணக்குகள் மூலமாக ஒரு நாளைக்கு வங்கிகளின் இருப்பை 50 முறை மட்டுமே சரி பார்க்க முடியும். இதேபோன்று மொபைல் நம்பருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளை 25 முறை மட்டுமே ஒரு நாளைக்கு சரி பார்க்க முடியும். இந்த வசதியை தேவை இன்றி அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்கவே இந்த முறை கொண்டுவரப்படுகிறது.
தானாகவே பணத்தை கழிக்கும் ஆட்டோ டெபிட் முறை குறைந்த நேரங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட இருக்கிறது. அதன்படி காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9:30 மணி வரையிலும் ஆட்டோ டெபிட் செய்ய அனுமதி கிடையாது. மேலும் யுபிஐ பண பரிவர்த்தனைகள் என்பது அதிகரித்து வரும் நிலையில் அதன் நெட்வொர்க்கில் அதிக அழுத்தம் ஏற்படுவதை தடுக்க இந்த முறைகள் கொண்டு வரப்பட இருக்கிறது.
மேலும் ஒரு பரிவர்த்தனை நிலுவையில் இருந்தால் அதனை மூன்று முறை மட்டுமே சரிபார்க்க முடியும் அதோடு 90 வினாடிகள் கட்டாய இடைவேளைக்கு பிறகு தான் பயனர் அதனை சரிபார்க்க முடியும்.